மட்டக்களப்பு மாவட்டத்தின் - கல்குடா வலயத்துக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான இருநாள் சிங்கள மொழி கற்றலுக்கான செயலமர்வு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 06.09.2018 திங்கட்கிழமை ஆரம்பமானாது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் திரு.A.நவேஸ்வரன் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர திரு.வி.சந்திரகுமாரின் வரவேற்புடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சானது இரண்டாம் மொழி அறிவினை மேம்படுத்தும் நோக்கிலும் நாட்டில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஏற்படும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இரண்டாம் மொழி (சிங்களம்-தமிழ்) முன்னேற்ற நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ரீதியிலும், பிரதேச செயலக ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் இச் செயற்திட்டத்தில் பல்வேறு மட்டங்களிலுமுள்ள தமிழ் மொழி பேசும் மற்றும் சிங்கள மொழி பேசும் உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழித் தேர்ச்சிக்கான செயற்திட்டமாகவே இது அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.