
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் 07.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த காலங்களில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பதற்கு அரசாங்க திணைக்களங்கள் செயல்ப்பட்டதோ அதைப்போன்று சகலரதும் ஒத்துளைப்பும் எமது மாவட்டத்தின் மக்களை காப்பாற்றுவதற்கு உதவவேண்டும் எனவும், மாவட்டத்தின் பொது இடங்களில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
பொதுப் போக்குவரத்துக்கள் கடுமையாக கண்காணிப்பதற்காக பொலிஸ், இரானுவத்தினருடன் சுகாதார பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளனர். சிறுவர் பூங்காக்களை முற்றாக மூடுமாறும், தனியார் கல்வி நிலையங்களையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதாகவும், சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சமூக இடைவெளி, முகக் கவசங்கள், கைகழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து பேணப்படல் வேண்டும் என்ற அறிவித்தல் ஒலிபெருக்கியூடாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிடுவோருக்கான இரண்டு பாஸ்கள் வழங்கும் நடைமுறை காணப்பட்டது. தற்போது ஒருவருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் ஆலயங்கல், சினிமா திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள்,களியாட்ட நிகழ்வுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அச்சுதன், போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கனேசலிங்கம், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திரு.லக்சிறி விஐயசேன, இராணுவ கட்டளை தளபதி மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.எஸ்.பிரகாஸ், வைத்திய அத்தியட்சகர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.









