
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர், அவ்வேளைகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் தரித்திருப்பதற்கான தற்காலிக கூடாரங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளவேண்டிய தேவையுள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களிடம் வைத்தியசாலை நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்டதாவது வைத்தியசாலைக்கு முன் வீதி ஒருவழிப்பாதையாக இருந்த போதும் நோயாளர்களை பார்வையிடும் நேரங்களில் அதிகளவான சன நெரிசல் காணப்படுகின்றதாகவும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகளின் தரிப்பிடமாகவும் வைத்தியசாலையின் முன்பகுதி கானப்படுவது நோயாளர் பார்வையிடும் நேரங்களில் அதிகளவான சிரமத்தினை பொதுமக்களும் வைத்தியசாலை ஊழியர்களும் எதிர்நோக்குகின்றனர் இதனை உடனடியாக தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது.
எதிர்காலங்களில் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டிய நிலை ஏற்படுமாயின் அதற்கான முன்னாயத்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய தேவை நமது மாவட்டத்திற்கு உள்ளது. அந்தவகையில் தனியார் வீடுகளில் தங்கியுள்ள வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு வாடகை வீடு வழங்குவதில் சிரமம் காணப்படுகின்றது அதற்கு அரசாங்க விடுதிகளை தயாராக்கி வைப்பதற்கு மாவட்ட செயலகம் ஆயத்தமாகவுள்ளது.வைத்தியசாலைக்கு வேலைக்கு வருகின்ற வெளிமாவட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரத்தியேக பஸ் ஒன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்கும் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு முகாமையர் மா.கிருஸ்ணராஜா இணக்கம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி மைதிலி, வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் மாநகர சபையின் மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






