
"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" என்ற கருப்பொருளுடன் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு, சமூக அபிவிருத்தி, மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு போன்ற பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
அந்தவகையில் உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தலைவர் எஸ்.ஜெயராஜ் அவர்கள் தலைமையில் தொழில் முயற்சி மையம் மட்டக்களப்பு மயிலம்பாவெளி தன்னாமுனையில் 23.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த தொழில் மையம் ஊடாக மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் ,யுத்தம் ,இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற யுவதிகள் , உதவி இன்றி கல்வி பயில்கின்ற மாணவர்கள் போன்றோருக்கு பொருளாதாரம் , தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உதவும் கரங்கள் அமைப்பினால் இந்த தொழில் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே .கருணாகரன் அவர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைக்கப்பட்ட இத் தொழில் முயற்சி மைய திறப்பு விழா நிகழ்வில் அழைப்பு விருந்தினர்கள் , மாணவர்கள் ,பயனாளிகள் கலந்துகொண்டனர் .








