C1043T01 Copy 2 resized

பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இயலளவு விருத்தி தொடர்பான பயிற்சி செயலமர்வின் முதலாம் கட்ட செயலமர்வானது 09.04.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவினால் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பதவி நிலை உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் சமகால போக்கு "Cloud Transformation in the Government sectors" எனும் முழு நாள் பயிற்சி செயலமர்வானது மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். குறித்த செயலமர்வில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள் அடங்கலாக மேலும் பல பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.இ.மோகன், மாவட்ட செயலக கணக்காளர் திரு எம்.வினோத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டிருந்ததுடன், செயலமர்விற்கு வளவாளராக "IFS" நிறுவனத்தின் வளவாளரான விக்னராஜ் மனோகரராஜா கலந்துகொண்டு சிறப்பான முறையில் வளவாண்மையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

C1043T01 Copy 2 resized C1045T01 Copy resized C1049T01 Copy resized C1052T01 Copy resized

C1058T01 resized C1068T01 Copy resized C1069T01 Copy resized C1065T01 Copy resized

C1067T01 Copy resized C1053T01 Copy resized