
ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மக்களை சந்திப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் மே மாதம் முதற்பகுதியில் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று கேட்டறிந்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. மேலும் ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி விஜயத்திற்கான முன்ஏற்பாடுகள் தொடர்பான விசேட கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் ஜனாதிபதி இணைப்பாளர் இசுறுஹேரத்தின் பங்குபற்றுதலுடன் 20.04.2021 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரவு அதிகாரி மேஜர் எரிக் குனசேகர, இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரோஸ்மன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் திரு கே. ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன், மாவட்ட பெறியியலாளர் திரு வீ. சுமன், நிர்வாக உத்தியோகத்தர் திரு கே. தயாபரன், கணக்காளர் திரு எம். வினோத், மாவட்ட தகவல் அதிகாரி திரு வீ. ஜீவானந்தன் உட்பட ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






