
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் ஐரோப்பிய யூனியனின் உதவியுடன்இ வீ எபக்ட் நிறுவனமும் காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனமும் இணைந்து கிரான் பிரதேசத்திலுள்ள பேரில்லாவெளி கிராமத்தில் அன்னம் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டு அச்சங்கத்திற்கு 32 ஆடுகள் கொண்ட பாதுகாப்பான ஆட்டுப்பண்ணை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் குறித்த சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களால்இ பிரதேச செயலாளர் திரு.எஸ்.ராஜ்பாபு, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, காவியா பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் காவியா நிறுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந் திகழ்வின்போது காவியா நிறுவனமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து வீதியோரங்கள் மற்றும் பொது இடங்களில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டது.
வீ எபெக்ட் நிறுவனமும் காவியா பொண்கள் சுயதொழில் நிறுவனமும் இணைந்து கிராமங்களில் சங்கங்கள்இ குழுக்கள் அமைத்து கடந்த ஆறு (06) வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் கிரான்இ வாகரை , வவுணதீவு, களுவங்கேணி, மண்முனை வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






