02 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்ய மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி சபையினால் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட அரசாங்க அதிபரும் விளையாட்டு அபிவிருத்தி சபையின் தலைவருமாகிய திரு.கே.கருணாகரன் அவர்களின் தலைமையில் 24.11.2021 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சபையின் நிருவாக சபைக் கூட்டத்தின்போதே மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பாக புதிய ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா நோய் பரவல் காரணமாக மாவட்டத்தின் விளையாட்டுத் துறை இரண்டு ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது. தற்போது கொரோனா நோய்த் தாக்கம் சற்று தளர்வடைந்து காணப்படும் நிலையில் விளையாட்டு துறையினை மேம்படுத்தி புத்தெழிச்சி பெறவைக்க மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி சபை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

விளையாட்டு அபிவிருத்தி சபையின் நிருவாக சபைக் கூட்டத்தின்போது பிரதம கணக்காளர் திரு.கே. ஜெகதீஸ்வரன், காணிப் பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரும் சபையின் செயலாளருமாகிய திரு.வீ. ஈஸ்வரன் உட்பட விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு சங்கங்களின் தலைவர், செயலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

01 03 04 05