
வருடாவருடம் கார்த்திகை 25 தொடக்கம் மார்கழி 10ம் திகதி வரை சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்களை விழிக்கும் தினங்களில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக பெண்களுக்கு தேவையான சட்ட விழிப்புணர்வு, ஆளுமை விருத்தி செயற்பாடுகள் மற்றும் கௌரவிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடின உழைப்பினால் முன்வந்த பெண்களை கௌரவிக்கும் முகமாகவும் அவர்களது உரிமை சார்ந்த விடயங்களை வெளிக்கொண்டுவரும் முகமாக 02.12.2021 இந்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு தன்னாமுனை மியானி வளாகத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றதோடு பொலிஸ் பிரிவு, வைத்திய பிரிவு, விளையாட்டு துறை, சமையல்துறை, பாதுகாப்பு துறை இவற்றில் பணிபுரியும் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அதிதிகளையும் கௌரவித்து நினைவு சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு நடை பவனியானது தன்னாமுனை மியானி வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரை சென்று விழிப்புணர்வு வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே.கருணாகரன்அவர்கள் கலந்துகொண்டதுடன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதன வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி . கலாரஞ்சினி கணேசலிங்கம், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.நாகலிங்கம் மயூரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வன்னியசிங்கம் வாசுதேவன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், சிறுவர் மற்றும் மகளீர் பொலிஸ் பொறுப்பதிகாரி திருமதி.சுசிலா, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பணிப்பாளர் கண்டுமனி லவகுசராசா, அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமமட்ட பெண்கள் குழுக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







