DSC 1545 resized

மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் தடுப்பு செயலணியின் கூட்டம் 21.12.2021 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

 

போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களை வலுவூட்டும் முகமாக முழுநாள் செயலமர்வு ஒழுங்கு செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இதுவரை 1423 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் 351 பேர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் போதைப் பொருள் அற்ற நாடாக சௌபாக்கியமான தேசத்தினை அனைத்து அரசியல் சாராத அரசாங்க உத்தியோகத்தர்களின் முயற்சி எடுத்து, கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் தங்களை அற்பணிக்கவேண்டும் எனவும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மதுபான சாலைகள் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கதாக சுட்டிக்காட்டப்பட்டது.

மாவட்டத்தின் குறிப்பிட்டுக்கூறக் கூடியவகையில் சிலபகுதிகளில் அதிகளவான போதைப் பொருள் வியாபாரம் நடைபெற்று வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துக்கான புதிய பொறிமுறையினை கையான்டு வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.வண்டார குறிப்பிட்டார்.

வெல்லாவெளி, வாகரை, களுவாஞ்சிக்குடி, செங்கலடி, பட்டிப்பளை, கிரான் போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் அதிகளவான சட்டவிரோத மது தயாரிக்கப்படுவதாகவும் ஏறாவூர், வாழைச்சேனை, காத்தாங்குடி போன்ற பகுதிகளில் ஐஸ், கஞ்சா, அவின் போன்றவைகள் அதிகளவில் வியாபாரம் செய்யப்படும் இடமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் ,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட உதவி செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் கே.அருளானந்தம் வைத்திய அதிகாரி கே.அருள்ஜோதி போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.வண்டார மதுவரி திணைக்கள அத்தியட்சகர் திரு.எஸ்.ரஞ்சன் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

DSC 1572 resized DSC 1551 resized DSC 1556 resized