IMG 1880 resized

மட்டக்களப்பு மாவட்ட தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் குடிசன புள்ளிவிபர பணியினை தொடங்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் பணியாற்றுகின்ற புள்ளிவிபரவியலாளர்களுக்கும் தங்களின் பிரதேச கிராம மட்டங்களில் உள்ள தரவுகளை நேர்த்தியாகவும் தவறு இன்றி செய்வதற்கும் மடிக்கணனி  மாவட்ட அரசாங்க அதிபர்  திரு.கே.கருணாகரன் அவர்களினால் 03/01/2022 அன்று  மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

தற்கால நவீன தொழிநுட்பத்திற்கு அமைவாக நாட்டினை சுபீட்சத்தின்பால் கட்டி எழுப்பும் நோக்கத்தின் அடிப்படையில் இச்செயற்திட்டம் இலங்கையில் சகல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின்  போது மாவட்ட புள்ளிவிபரவியலாளர் திரு .வு.ஜெய்தனன் மற்றும் திணைக்கள ஊழியர்கள் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

IMG 1885 resizedIMG 1891 resizedIMG 1894 resizedIMG 1900 resized