IMG 2264 resized

அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில்  உதித்த சுபிட்சத்தின்  நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக பசுமையான  நஞ்சற்ற நாடு எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இயற்கை  உர  உற்பத்தி  தொடர்பான செயலமர்வு     மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க .கருணாகரன் அவர்கள் தலைமையில்  இடம்பெற்றது.

 

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் விவசாய துறையில் உள்ளவர்கள் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிப்பதை  நோக்காக கொண்டு செயற்படவேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம்   அதிக விளைச்சலை பெறமுடியும்.  இயற்கை  உரத்தினை துரிதமாகவும் வினைத்திறனாகவும்  உற்பத்திசெய்ய வேண்டும். இதற்காக  இராணுவத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. பெரும்போகத்தின் போது  இயற்கை உரத்தினை மட்டும் பாவனைக்கு விவசாயிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இம்முறை இரசாயன உரம் தனியாரினால் விற்பனை செய்யப்படவுள்ளது.  இரசாயன உரப்பாவனையினால்  தொற்றாநோய் அதிகளவில் எற்படுகிறது மற்றும் எமது நாட்டின் உணவு பாதுகாப்பினை அனைத்து உத்தியோகத்தர்களும்  உறுதிப்படுத்தவேண்டும் என தெரிவித்தார்.

இவ் நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர்  திருமதி .சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பசுமை  உற்ப்பத்தி  செயலணி அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்  பிரிகேடியர் டிலுக்க பண்டார, மாவட்ட விவசாய பணிப்பாளர் ,பிரதி விவசாய பணிப்பாளர் , கமநல சேவை ஆணையாளர் , பணிப்பாளர்கள்,இராணுவ அதிகாரிகள்  ,விவசாய போதனா ஆசிரியர்கள் , பெரும்பாக உத்தியோகத்தர்கள் , மற்றும் விவசாய துறையில் கடமையாற்றும்  உத்தியோகத்தர்கள் , மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

IMG 2264 resized IMG 2262 1 resized IMG 2241 resized

IMG 2254 resized IMG 2265 resized IMG 2258 resized