
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் விமானப்படையின் குரூப் கேப்டன் நிலந்த பியசேனவுக்கு பிரியாவிடை நிகழ்வு 31.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வருடங்கள் சேவையாற்றிய குரூப் கேப்டன் நிலந்த பியசேன பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்றுசெல்வதால் இவருக்கான பிரியாவிடை வைபவம் ஒன்று அரசாங்க அதிபரினால் ஒழுங்கு செய்யப்பட்டு சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
இவர் கடந்த இரு வருடகாலத்தினுள் மக்களுக்கான மனித நேய பணிகளை செயற்படுத்திய ஒருவர்,மாந்தீவூ வைத்தியசாலையினை புணர்நிர்மாணம் செய்து பின்தங்கிய பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி சிறார்களினால் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கான ஊக்கத்தினையும் முன்னெடுத்திருந்தார்.மட்டு நகர் பகுதியில் அமைந்துள்ள காந்தி பூங்காவினை தங்களுடைய விமான படையணியை பயன்படுத்தி அழகுபடுத்துவதில் பெரும்பங்கினை வகித்தமை குறிப்பிடத்தக்கது.இவர் 27 வருட காலமாக விமான படையில் சேவையாற்றியவர் ஆவார். நிலந்த பியசேனவினால் அரசாங்க அதிபருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு கே. தயாபரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






