
மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான கொவிட் 19 பூஸ்டர் தடுப்பூசி 10/02/2022 அன்று இராணுவத்தினரால் ஏற்றப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரச உத்தியோகத்தர்களுக்காக மாவட்ட செயலகத்தில் ஏற்றப்பட்டிருந்தது.
அக்காலப் பகுதியில் பூஸ்டர் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ள தவறியவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டு குறித்த காலத்தினை கடந்திராத அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான தடுப்பூசி இராணுவத்தினரால் ஏற்றப்பட்டது.
நாட்டில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்துவரும் நிலையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களே அதிகம் இனங்காணப்பட்டுவருவதாக சுகாதார பிரிவு தகவல்கள் குறிப்பிடுகின்றன. பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை முற்றாக கடைப்பிடிப்பதுடன் பூஸ்டர் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்வதனால் மாத்திரமே கொவிட் மரணங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் சுகாதாரப் பிரிவு மக்களை அறிவுறுத்தி வருகின்றது.
இதனடிப்படையில் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்களென பலரும் பூஸ்டர் தடுப்பூசியினை ஆர்வத்துடன் ஏற்றிக் கொள்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.







