4 5 resized

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் அரசகரும மொழித் தேர்ச்சிக்கான சிங்கள மொழியினைப் பயிற்றுவிக்கும் பயிற்சிப்பட்டறை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் 14.02.2022 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ. நவேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்பயிற்சி நெறியானது மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், நிறுவக அலுவலகங்கள், கல்வி திணைக்கள அலுவலகங்கள், விவசாயம், மற்றும் நீர்பாசன திணைக்களங்களில் கடமைபுரியும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் 80 பேருக்கு அரச கருமமொழி சிங்களத்தில் தேர்ச்சியினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நெறியானது 200 மணித்தியாலங்களைக் கொண்ட சிங்களம் மட்டம் 1 இற்கான தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளக்கூடியவாறு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதனூடாக அரச உத்தியோகத்தர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய தகைமையாகிய அரசகரும மொழி சிங்களத்தில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுவர்.

அரச கரும மொழித்திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு.வீ. சந்திர குமார் அவர்களின்  ஒருங்கிணைப்புடன் இடம்பெறும் இவ் ஆரம்ப  நிகழ்வில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாத் ஆர். ஹேரத், உதவிப் பணிப்பாளர், பஷ்மிலா ரவிராஜ், கல்வி மற்றும் ஆய்வு உத்தியோகத்தர் ரிட்மா லன்சகார, பாட இணைப்பாளர் கல்யானி உட்பட சிங்கள மொழி பயிற்றுவிப்பாளர்களான திரு மாணிக்கவாசகம், திலினிமதுசங்க மற்றும் பயிற்சியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

1 7 resized 2 6 resized 4 5 resized

3 5 resized 5 6 resized 6 4 resized

7 3 resized 8 1 resized