IMG 4344 resized

கலாசார அலுவல்கள் அமைச்சின், கலாசார மத்திய நிலையங்கள் செங்கலடி மற்றும் வாகரை பிரதேசங்களில் எதிர் வரும் 02.03.2022 திகதி கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் பங்கு பற்றுதலுடன் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான முன்னாயத்த ஏற்பாட்டு நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.கருணாகரன் அவர்கள்  தலைமையில் மாவட்ட செயலகத்தில் 16.02.2022 அன்று  நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.என்.திலக் ஹெட்டியாராச்சி ,பிரசாத் ரணசிங்க கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் , மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , உதவி மாவட்ட செயலாளர் திரு.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பணிப்பாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் , மற்றும்  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

IMG 4334 resized IMG 4339 resized IMG 4338 resized