WhatsApp Image 2022 03 16 at 18.06.11

"முக்காடு" சிறப்பு மலர் வெளியீட்டு வைபவமும் பிரதேச செயலாளர் திரு.வீ.தவராஜா அவர்கள் தலைமையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில்   16.03.2022 அன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர்,ஓய்வுநிலை பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.ஏ.நஸீரா,சட்டத்தரணி யூ.எல்.றிஸ்னா பர்வின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்,அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் "முக்காடு" சிறப்பு மலரின் முதல் பிரதி பிரதேச செயலாளர் திரு.வீ.தவராஜாவினால்  மாவட்ட அரசாங்க அதிபர்  திரு.கே.கருணாகரன்  அவர்கள் வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.

இச் சிறப்பு நூலின் நூல் அறிமுகத்தை ஓய்வு நிலை ஆசிரியை திருமதி பெளசியா கலீல் நிகழ்த்தினார்.இதன் போது பிரதேச கலைஞர்களின் விசேட கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கான சிறப்புப் பரிசில்களும் விருதுகளும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 03 16 at 18.06.10 WhatsApp Image 2022 03 16 at 18.06.08 1 WhatsApp Image 2022 03 16 at 18.06.06 1

WhatsApp Image 2022 03 16 at 18.06.11 WhatsApp Image 2022 03 16 at 18.06.06 2 WhatsApp Image 2022 03 16 at 18.06.08