
"நாடும் தேசமும் உலகமும் அவளே" என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெண்தொழில் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்திப்பிரிவினரும் பிரதேச மகளீர் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் 23.03.2022 ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், திருமதி.நவருபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், பிரதேச மகளீர் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்கள் என பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலக வளாகத்தில் பெண்தொழில் முயற்சியாளர்களினால் வர்த்தக கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு அவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதான அம்சமாக பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் மாவட்டத்தில் சிறந்த புத்தாக்கம் மற்றும் சிறந்த தொழில் முயற்சி போன்ற விடையங்களில் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








