விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 52 வது ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்படும் உதைபந்தாட்ட சமர் இம்மாதம் 6, 7, 8 ஆந்திகதிகளில் விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புறங்களில் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளை ஊக்கப்படுத்தி சிறந்த வீர, வீராங்கணைகளாக வளர்த்தெடுக்கும் பணியில் ராஜா விளையாட்டுக் கழகம் பங்களிப்புச் செய்துவருகின்றது. அந்தவகையில் இக்கழகத்தின் 52வது ஆண்டினை முன்னிட்டு விளாவூர் யுத்தம் 2022 எனும் தொனிப்பொருளில் இவ் உதைபந்தாட்ட சமர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கழகத்தின் தலைவர் திரு.எஸ். கேதீஸ்வரன் அவர்கள்  தலைமையில் வைகாசி மாதம் 06 ஆந்திகதி இடம்பெறவுள்ள ஆரம்ப நிகழ்வுக்கு காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் அவர்கள்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். மேலும் மண்முனைமேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர், மாவட்ட மற்றம் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் பலரும் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.