WhatsApp Image 2022 05 23 at 11.09.14 AM

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் கண்ணபுரம் கிராமத்தினை விவசாய மாதிரி  கிராமமாக செயற்படுத்த  கிழக்கு மாகாண ஆளுனரின் நிதி ஒதுக்கீட்டின்  கீழ்  விவசாய உபகரணங்கள் மற்றும் விவசாய  உள்ளிட்டு பொருட்கள்  விவசாயிகளுக்கு  வழங்கி வைக்கப்பட்டது. 

 

பசுமை விவசாயத்தின் மூலம் சிறந்த ஆரோக்கியமான உணவு உற்பத்திகளை அறுவடை செய்யவும்  சேதன பசளை பாவனை மூலம்   ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும் என இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக  மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட விவசாய  பணிப்பாளர் திரு.ஹரிகரன்,  பிரதி விவசாய பணிப்பாளர்  திரு.பேரின்பராசா,  போரதீவுப்பற்று உதவி பிரதேச செயளாலர் திரு.துலாஜனன், விவசாய போதனா ஆசிரியர் திரு.கோபி, விவசாய தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்பின் உறுப்பினர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

21 பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட விவசாயிகளுக்கு பயன் தரும்  விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் விவசாய  உள்ளீடுகள் என்பன இங்கு வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2022 05 23 at 11.09.13 AM WhatsApp Image 2022 05 23 at 11.09.11 AM WhatsApp Image 2022 05 23 at 11.09.10 AM