
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியானது வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
சமூக சேவை திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக சமூக சேவைகள் பிரிவும் இணைந்து நடாத்திய விளையாட்டுப் போட்டித் தொடரானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டிக்கு சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் (மத்தி) பணியாற்றல்களுடன் 195 மாற்றுத்திறனாளிகள் இப்போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.குறித்த போட்டி நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இப்போட்டி தொடரில் முதலாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட போட்டியாளர்கள் தேசிய மட்ட தடகள விளையாட்டுப் போட்டிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அனுப்பிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கத







