WhatsApp Image 2022 06 27 at 11.34.17 PM

அரச திணைக்கள உத்தியோகத்தர்களிடையே வீட்டுத்தோட்ட பயிர்செய்கையை ஊக்குவிக்கும்முகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுத்தோட்ட பயிச்செய்கைய்க்கான 30 ஆயிரம் மஞ்சள் மரக்கன்றுகளும் 5, 000 ஆயிரம் இஞ்சி மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படப்படவுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள 30 ஆயிரம் மஞ்சள் மரக்கன்றுகளும் 5, 000 ஆயிரம் இஞ்சி மரக்கன்றுகளில் 2500 மஞ்சள் மரக்கன்றுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக அலுவலக உத்தியோயோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான மரக்கன்றுகள் மாவட்ட செயலக விவசாய விரிவாக்கல் பிரிவு உத்தியோகத்தர் நர்த்தனா குகதாசன் அவர்கள் தலைமையில் இன்று வழங்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் வீட்டுத்தோட்ட பயிர்செய்கையினை ஊக்கு விக்கும் திட்டமாக அரச திணைக்கள உத்தியோகத்தர்களான ஊக்குவிப்பு திட்டங்கள் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 06 27 at 11.34.18 PM WhatsApp Image 2022 06 27 at 11.34.19 PM WhatsApp Image 2022 06 27 at 11.34.20 PM