WhatsApp Image 2022 06 28 at 4.40.08 PM

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உணவு வகை பயிரிடல், உணவு ஊக்குவிப்பு மற்றும் தேசிய உணவு கலாச்சாரத்தை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்கள் தலைமையில் 28.06.2022 ஆம் திகதி  மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

 

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எவ்வாறு உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் இவ் உணவு பஞ்சத்தை ஈடு செய்ய ஒவ்வொருவராலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வீடுகளில் பயிர் செய்யும் முறைகள் தொடர்பாக  இக் கருத்தரங்கில் விபரிக்கப்பட்டது.

அத்தோடு இக் கருத்தரங்கின் விரிவுரையாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பாடவிதான உத்தியோகத்தர்களான இளமாறன் மற்றும் லக்ஸ்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக் கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் திரு.இராஜதுரை ஹரிஹரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்களான ஐயநுலாப்தீன், மலர்செல்வன் , கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் தனுசியா ரூட் பர்க்மன் மற்றும் மாவட்ட கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண கலாச்சார உத்தியோகத்தர்கள், இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள், முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர்கள் என பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

WhatsApp Image 2022 06 28 at 4.40.09 PM 1 WhatsApp Image 2022 06 28 at 4.38.41 PM WhatsApp Image 2022 06 28 at 4.40.07 PM

WhatsApp Image 2022 06 28 at 4.40.06 PM WhatsApp Image 2022 06 28 at 4.40.09 PM