
இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணப் பொருட்களில் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் 30.07.2022 ஆம் திகதி மட்டக்களப்பை வந்தடைந்துள்ளது.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களது வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்ட செயலக அதிகாரிகள் புகையிரத நிலைய அதிகாரிகளிடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.
மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக 43,825 பக்கட் அரிசி மற்றும் 11,925 பக்கட் பால்மா என்பன கிடைக்கப்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் குறித்த நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






