WhatsApp Image 2022 08 24 at 3.21.09 AM

வாழ்வின் சக்தி செயற்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 24.08.2022 ஆம் திகதி  உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களை இனங்கண்டு அவர்களுக்கான அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதே வாழ்வின் சக்தி செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

 

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக பிரதேச செயலாளர்களின் ஒழுங்குபடுத்தலில் வாழ்வின் சக்தி திட்டம் 24.08.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

LOLC குழுமம் இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புலையவெளி, பன்குடாவெளி தளவாய் மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பறங்கியாமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிற்கு 600 உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், LOLC குழுமத்தின் கிழக்கு பிராந்திய குழும தலைவர் சுமன், பிரதேச முகாமையாளர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் முன்னெடுக்கப்பட்ட வாழ்வின் சக்தி திட்டத்தில் பங்கேற்று மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை பகிர்ந்தளித்திருந்தனர்.

WhatsApp Image 2022 08 24 at 3.21.07 AM WhatsApp Image 2022 08 24 at 3.21.11 AM WhatsApp Image 2022 08 24 at 3.21.13 AM WhatsApp Image 2022 08 24 at 3.21.09 AM

WhatsApp Image 2022 08 24 at 3.21.12 AM WhatsApp Image 2022 08 24 at 3.21.16 AM WhatsApp Image 2022 08 24 at 3.21.03 AM WhatsApp Image 2022 08 24 at 3.21.14 AM