
மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் இயங்கிவரும் பதிவாளர் நாயக கிழக்கு வலய அலுவலத்தின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி.ரஞ்சினி சுந்தரலிங்கம் அவர்கள் 26.10.2022 அன்று அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் 1991 ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் நியமனம் பெற்று கொழும்பு பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் கடமையாற்றி 1991 ஏப்ரல் 1 ஆம் திகதி மட்டக்களப்பு காணி பதிவகத்திற்கு இடமாற்றம் பெற்று பின்னர் 2006 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் பதிவாளர் நாயக திணைக்கள கிழக்கு வலய அலுவலகத்தில் கடமையாற்றி நேற்றைய தினம் 32 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார்.இவர் ஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்டவரும்இ மட் ஃவின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் பழையமாணவியும் ஆவார்.






