
அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் இரண்டாம் மொழி பயிற்சிநெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவருகின்றன. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீதி மன்ற உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சிநெறி 09.12.2022 அன்று மாநகரசபை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
உத்தியோகத்தர்களின் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக்கற்கை நெறி அமைந்திருந்தது. இந் நிகழ்வின் போது பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் உத்தியோகத்தர்களினால் அரங்கேற்றப்பட்டது. 150 மணித்தியாலங்களை உள்ளடக்கியதாக இந்த கற்கை நெறி அமைந்தது.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவருபரஞ்சினி முகுந்தன் (காணி) நீதவான் நீதிமன்ற நீதிபதி கௌரவ.பிற்றர் போல் மற்றும் உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், மேல் நீதி மன்ற பதிவாளர் திருமதி.திருச்செல்வம் மதிவதனி, மாவட்ட செயலகத்தின் இரண்டாம் மொழி கற்கையின் இணைப்பாளர் திரு.வி.சந்திரகுமார் மற்றும் இவ் பாடநெறிக்கான வளவாளராக திருமதி.விஜயகாந் சர்மிளா, திருமதி.கோபிநாத் பிரேமிளா, செல்லி. எம்.கே.திலினி மதுசிகா கலந்துகொண்டனர்.






