WhatsApp Image 2022 12 21 at 10.19.26 2

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அவர்கள் தலைமையில்  மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி     ஸ்ரீகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் டேபா  மாநாட்டு மண்டபத்தில் 21.12.2022  இடம் பெற்றது. அதிதிகளினால் மங்கள ஒளிவிளக்கு ஏற்றப்பட்டு இந் நிகழ்வு ஆரம்பமாகியது.

 

பிரதம விருந்தினர்களாக அன்னமாள் ஆலய அருட்தந்தை சி.வி.    அன்னதாஸ் அவர்கள் மற்றும் அருட் தந்தை க.ஜேகதாஸ் ஆகியோர்  கலந்துகொண்டனர்.இவ் உலகின் சாந்தி சமாதானம்  பிறக்க வேண்டும் என்பதற்காக  அவதரித்த  கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக ஒளி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் நத்தார் இன்னிசை கரோல் கீதம்  இசைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) நவரூப ரஞ்சனி முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணிய மூர்த்தி, சமூர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன், கணக்காளர் வினோத், புள்ளி விபரவியளாலர் ஜேய்தனன்,தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் லக்சிகா கதீஷன்  மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்  பலர் கலந்து கொண்டனர். இதன் போது கலந்துகொண்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.

WhatsApp Image 2022 12 21 at 10.19.26 2 WhatsApp Image 2022 12 21 at 10.19.07 WhatsApp Image 2022 12 21 at 10.19.06 WhatsApp Image 2022 12 21 at 10.19.19

WhatsApp Image 2022 12 21 at 10.19.30 WhatsApp Image 2022 12 21 at 10.19.33 WhatsApp Image 2022 12 21 at 10.19.26 1