WhatsApp Image 2023 02 01 at 22.16.22

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.02.2023 அன்று இடம் பெற்றது.

 

கைத்தொழில் அமைச்சின் கிழ் இயங்கி வரும் கைத்தொழில்   அதிகாரசபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  27000 தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் நுட்ப மற்றும் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சிகள் வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளது. எமது பிரதேசத்தில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பான சாத்திய வளம் குறித்து இதன் போது  கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து  எற்றுமதி செய்வதன் மூலம் எமது நாட்டின் மொத்த உள்நாட்டு  உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்திட்டமாக  அமைந்ததுடன் தொழில் முனைவோர்களுக்கு இலகு கடன் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வளவாளர்களினால் இதன் போது தெரிவிக்கப்பட்டது. தொழில் முயற்சியாளர்களினால் நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் அந்திய செலவாணியை பெற்று கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் வைத்தியர் சரங்க அழகப்பெரும, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ரத்னமாலலா மற்றும் பணிப்பாளர் டிக்வேல்ல , உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், பதவி நிலை அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், உயரதிகாரிகள், அரச சார்பற்ற  நிறுவனங்கள்  மற்றும் தொழில்முனைவோர் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023 02 01 at 22.16.24 WhatsApp Image 2023 02 01 at 22.16.22 2 WhatsApp Image 2023 02 01 at 22.16.22 WhatsApp Image 2023 02 01 at 22.16.23