WhatsApp Image 2023 02 01 at 22.36.58

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதனை பசளையின் கீழ் விளைந்த வேளாண்மையின் நெல் அறுவடை விழா திமிலைதீவில்  நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி விவசாய போதனாசிரியர் பிரிவின் திமிலை தீவு கிராம சேவையாளர் பிரிவில் திரு. சிவலிங்கம் ஸ்ரீதரனுக்குச் சொந்தமான வயல் நிலத்தில் சேதன பசளை நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

சமய வழிபாடுகளுடன் சுப வேளையில் இடம் பெற்ற அறுவடை நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் திரு.வி. பேரின்பராஜா, தேசிய உர செயலக மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.கே.எல்.எம். சிராஜூன், பெரேரா பிளான்ட் மேட் உர நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் திரு.சுரங்க டீ சில்வா, மண் முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு.கே.ராஜன் உட்பட அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2023 02 01 at 22.36.10 WhatsApp Image 2023 02 01 at 22.36.58 WhatsApp Image 2023 02 01 at 22.36.24 WhatsApp Image 2023 02 01 at 22.36.40