
கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல். அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் 22.06.2023 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர், உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கணக்காளர் கே சித்ரா உட்பட நிருவாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கடவுச்சீட்டு பெறுவதற்கு பதிவு செய்தவரின் புகைப்படம் எடுக்கப்பட்டு விரல். அடையாளம் எடுக்கப்பட்டு கடவுச் சீட்டுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ,காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் ஆகியோரிடம் கடவுச் சீட்டுக்கான விண்ணப்பம் விண்ணப்பதாரியினால் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல். அடையாளம் எடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது






