WhatsApp Image 2023 08 23 at 15.28.13

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பெண்கள் வலையமைப்புகளுக்கு இடையிலான  அனுபவ பகிர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.08.2023 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ௧லாமதி பத்மராஜா அவர்களின்  வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட  உதவி  செயலாளர்  ஆ.நவேஸ்வரன் தலைமையில் நடை பெற்றது.

 

இளைஞர் அபிவிருத்தி அகம்  நிறுவனத்தின் எற்பாட்டில் இரு மாவட்டங்களினதும் மகளிர் வலையமைப்புக்கள் சமூக, ஜீவனோபாயத்தின் போது ஏற்படும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14,  திருகோணமலை  மாவட்டத்தின் 11 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட பெண்கள் சம்மேளன உறுப்பினர்கள் இதில் அனுபவங்களை முன்வைத்தனர்.

பெண்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து,  கிராம மட்டத்தில் இருந்து அப் பெண்களை  வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றமையையும், பாலியல் வன்முறையை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உலவள ஆற்றுப்படுத்தல் , இலவச சட்ட ஆலோசனை வழங்கல் போன்றவை தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எஸ் அருனாழினி, திருகோணமலை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எ.எம்.சுவர்ண தீபானி அபேசேகர, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலிப்குமார் மற்றும் மகளிர் அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023 08 23 at 15.28.13 WhatsApp Image 2023 08 23 at 15.28.17 WhatsApp Image 2023 08 23 at 15.28.28 WhatsApp Image 2023 08 23 at 15.28.18

WhatsApp Image 2023 08 23 at 15.28.19