WhatsApp Image 2023 08 24 at 15.31.26 1

மட்டக்களப்பில்  திறன்மிகு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.08.2023 அன்று இடம் பெற்றது.

 

தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தின் அனுசரணையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில்  தெரிவு செய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்து வதற்கான செயற்திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ் விழிப்புணர்வு கருத்தரங்கு  தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை எவ்வாறு   சந்தைப்படுத்தல், சந்தைப்படுத்தலில் ஏற்படுகின்ற சிக்கள்கலான செலவு, வீண்விரயங்கள், சேமிப்பு போன்றவையும், வெளிநாட்டு சந்தையில் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதித்தரத்திக்கான அங்கீகாரம் தொடர்பாகவும் தெளிவு படுத்தப்பட்டது. அத்துடன் சிறிய சந்தைப்படுத்தல் வலையமைப்பு, முகாமைத்துவ நடைமுறை, மனித வள முகாமைத்துவம், விலைத் தொழில்நுட்பம் ஆகிய விடையங்கள் தொடர்பாக தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.புவனேந்திரன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

இந் நிகழ்வில் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தின் வட கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.அர்ச்சுதன்,  சிரேஷ்ட  உற்பத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீத்தானி அபேயரத்தின, மற்றும் நதிக்கா பண்டார, 14 பிரதேச செயலக பிரிவுகளின் உற்பத்திதிறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023 08 24 at 15.31.26 1 WhatsApp Image 2023 08 24 at 15.31.20 WhatsApp Image 2023 08 24 at 15.31.25 WhatsApp Image 2023 08 24 at 15.31.26

WhatsApp Image 2023 08 24 at 15.31.32 WhatsApp Image 2023 08 24 at 15.31.33 WhatsApp Image 2023 08 24 at 15.31.33 1 WhatsApp Image 2023 08 24 at 15.31.30