WhatsApp Image 2023 09 01 at 16.16.28

மட்டக்களப்பு  திருப்பெரும்துறை  வீதி அபிவிருத்தி அதிகாரசபை வளாகத்தில் கனரக வாகனம்  இயக்குவதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான  இணைப்பு படிவம்  அமைச்சரினால் வழங்கி வைப்பு. 

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவநேசதுரை  சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  வருகை தந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடக அமைச்சர் கலாநிதி கௌரவ பந்துல குணவர்த்தன அவர்களினால் இணைப்பு படிவம்  வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடக அமைச்சர் பொறியியலாளர்களினால் வழங்கப்படும்  இப் பயிற்சியை பூர்த்தி செய்கின்ற நபர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதுடன்  அந்நியசெலாவணியையும் எமது நாட்டிற்கு பெற்று கொடுக்கமுடியும் என அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனத்தினால்   கனரக  வாகன இயக்குனர்ளுக்கான நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது. கனரக வாகன இயக்குனர்களுக்கான  கற்கை நெறிகள் வெளிமாவட்டங்களில் இடம் பெற்று வரும் நிலையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் கௌரவ சிவ சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனத்தில்  பூர்த்தி செய்பவர்களுக்கு மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட  பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன், அரச அபிவிருத்தி மற்றும் நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இயந்திரி குசான் டிவிந்த மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன்,வீதி அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகள்  அம்கோர் நிறுவன பிரதிநிதிகள்  என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023 09 01 at 16.16.38 WhatsApp Image 2023 09 01 at 16.16.28 WhatsApp Image 2023 09 01 at 16.16.29 WhatsApp Image 2023 09 01 at 16.16.27

WhatsApp Image 2023 09 01 at 16.16.38 1 WhatsApp Image 2023 09 01 at 16.16.39 WhatsApp Image 2023 09 01 at 16.16.26