WhatsApp Image 2023 09 12 at 15.24.44

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன புகை  பரீட்சித்தல் மற்றும் விழிப்புணர்வு செயலமர்வு  மட்டக்களப்பு மாவட்ட பிரதான மோட்டார் பரிசோதகர் ரி. சிவயோகன் அவர்களின் தலையில் 12.09.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் மாவட்டத்தின் 14  பிரேச செயலக பிரிவில் கடமையாற்றும் சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள், அளவைகள் நிறுவைகள் திணைக்களக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் வாயு வெளிவிடல் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் இடம் பெறும் 4 நாள் கொண்ட இந் நிகழ்வின் முதல் நாள் நிகழ்வில் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையற்ற சூழலை உருவாக்கும் தேசிய  வேலைத்திட்டம் அமுல்ப்படுத்துவதற்கான செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் போது  மோட்டார் வாகன சட்ட விதிகள் பற்றியும் வளி மாசுபாடு சம்பந்தமான மனித சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

மேலும் வாகனங்களின்  புகை பரிசோதனையின் போது  அவதானிக்க வேண்டிய தொழில்நுட்ப விடயங்கள்  தொடர்பாகவும் விரிவாக விபரிக்கப்பட்டதுடன் இச்செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளினால்  வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது அம்பாறை மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் எந்திரி. கே. மதிவண்ணன், தொழில் நுட்பவியலாளர் என்.எம்.எம்.மர்சூக், சூற்றுச்சூழல் உத்தியோகத்தர் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023 09 12 at 15.24.48 WhatsApp Image 2023 09 12 at 15.24.44 WhatsApp Image 2023 09 12 at 15.24.51 WhatsApp Image 2023 09 12 at 15.24.50 1

WhatsApp Image 2023 09 12 at 15.24.41 WhatsApp Image 2023 09 12 at 15.24.50 WhatsApp Image 2023 09 12 at 15.24.46 WhatsApp Image 2023 09 12 at 15.24.45