
காத்தான்குடி பிரதேசத்தில் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன ஸக்காத் நிதிய பங்களிப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட வீடு கையளிக்கு நிகழ்வு 23.10.2023 அன்று இடம்பெற்றது.
வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக சமுர்த்தி அபிலிருத்தி திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி.ஆரிபா ஜபறுழ்ழா கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன செயலாளர் ஏ. எல். எம். சபீல் (நளீமி), சம்மேளன உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபர்களுமான கே.எம் .எம்.சலீம் மற்றும் எம். சீ.எம் .ஏ .சத்தார், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கணக்காளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், வங்கி வலய முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மேளன பிரதிநிகள் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.சமுர்த்தி நிதிய பங்களிப்புடன் ரூ. 750000 நிதியும் சம்மேளன பங்களிப்பில் ரூ. 750000 நிதியும் ஏனைய தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடனும் இவ்வீடு கட்டி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







