WhatsApp Image 2024 01 09 at 16.04.50

தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 09.01.2024 அன்று இடம் பெற்றது.

2050 ஆம் ஆண்டளவில் நாட்டை  அபிவிருத்தி  அடைவதை நோக்காககொண்டு கிழக்கு மாகாணத்திட்டவரைபு   உயர் மட்ட அதிகாரிகள்  பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது. மாவட்டத்தினை  பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதற்கு தேவையான பூர்வாங்கல் திட்டங்கள், நகரமயமாக்கல்  வேலைத்திட்டத்தினை  அபிவிருத்தி செய்து  மாவட்டத்தை மேம்படுத்துவதற்கு தகுந்த மூலோபாய  பிரதேசங்களை அடையாளப்படுத்துவதற்கான துறை சார் நிபுணர்களுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது மாவட்டத்தின் விவசாயம், கால்நடை வளர்ப்பு ,வனம், காலநிலை மாற்றம், நில எல்லைகள், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழிற்துறை அபிவிருத்தி, போக்குவரத்து என பல விடயங்களில் இதன்போது  கவனம் செலுத்தப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர். திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,பேராசிரியர் ஜெயசிங்கம் ,பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டப்பணிப்பாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் ,  வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மத்திய நீர்ப்பாசன திணைக்களம், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் துறை சார் நிபுணர்கள்,விவசாய பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 01 09 at 16.04.50 WhatsApp Image 2024 01 09 at 16.04.49 1 WhatsApp Image 2024 01 09 at 16.04.49 WhatsApp Image 2024 01 09 at 16.04.48 1

WhatsApp Image 2024 01 09 at 16.04.48 WhatsApp Image 2024 01 09 at 16.04.47