ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் உதவி செயலாளர் திருமதி.டினுசா சிறிவீர அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போசாக்கு தொடர்பான செயற்திட்ட அறிக்கையினை தயாரிக்கும் கூட்டம் கடந்த 15.08.2019 (வியாழன்) மற்றும் 16.08.2019 (வெள்ளி) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் விசேட வேலைத்திட்டமாக போசாக்கு தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது. இலங்கையில் மொத்தம் எட்டு(08) மாவட்டங்கள் போசாக்கு இன்மை தொடர்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆறு மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு, திட்ட முன்மொழிவும் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது மட்டக்களப்பு ஆறாவது(06) மாவட்டமாக தெரிவாகி கடந்த 15.08.2019 (வியாழன்) மற்றும் 16.08.2019 (வெள்ளி) இதற்கான திட்ட முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார போசாக்கு தொடர்பான வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







