
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேசத்தில் சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் வட்டியில்லா கடன் 19.01.2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் எஸ் எச். முசமில் தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ எம். நஜிம் ஒழுங்கமைப்பில் 10 பயனாளிகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கம் நிகழ்வு இடம் பெற்றது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே ஜே முரளிதரன் அவர்கள் பயனாளிகளுக்கு நிதியினை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரமிசா மற்றும் கணக்காளர் எ. மோகனக்குமார், திட்டமிடல் பிரதி பணிப்பாளர் எச் எம். புவைத், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






