
தேசிய நிர்மாண சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் தேசமானி ரஞ்சித மூர்த்தி அவர்கள் தலைமையில் அஞ்சனா மண்டபத்தில் 20.01.2024 அன்று இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் மற்றும் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் அவர்களும் மற்றும் இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் எம்.டரின்டன் போல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் நிர்மாணத் துறையினை கட்டியெழுப்புதற்கு பங்களிப்புச் செய்தவர்களுக்கு அதிதிகளினால் விருதுகள் வழங்கபட்டதுடன், இதன்போது மாவட்டத்தின் இரண்டு இராஜாங்க அமைச்சர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் திணைக்களம் சார் உயர் அதிகாரிகள், பொறியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், அரச ஒப்பந்தகாரர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






