WhatsApp Image 2024 03 27 at 5.17.17 PM

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா இன்று இடம்பெற்றது. நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயத்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய  திறப்பு விழா நிகழ்வு அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட  மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும்  பின்தங்கிய பிரதேச பெண்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் ஆயித்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலையம் மற்றும் அதனோடு இணைந்த வெதுப்பக தொகுதியும்  திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்யானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் கலந்து கொண்டு இந்த புதிய உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்து அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும் பார்வையிட்டார். திறப்பு விழா நிகழ்விற்கு சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஆதீதி சொஷ், மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள், ஆயித்தியமலை பொலீஸ் நிலைய உயர் அதிகாரிகள், பிரதேச பொதுமக்கள் என பலரும் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர். பின் தங்கிய பிரதேச மக்களின் ஆரோக்கியத்தினை கட்டி எழுப்பும் முகமாக குறைந்த விலையில் காலடியிலேயே தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெறும் பொருட்டே இந்த புதிய உற்பத்தி நிலையமும்  வெதுப்பக தொகுதியும் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2024 03 27 at 5.17.15 PM WhatsApp Image 2024 03 27 at 5.17.16 PM WhatsApp Image 2024 03 27 at 5.17.16 PM 1 WhatsApp Image 2024 03 27 at 5.17.17 PM

WhatsApp Image 2024 03 27 at 5.17.20 PM 1 WhatsApp Image 2024 03 27 at 5.17.19 PM WhatsApp Image 2024 03 27 at 5.17.20 PM WhatsApp Image 2024 03 27 at 5.17.21 PM