
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பணிப்பாளராக திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 01.04.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தன் கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தன் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், தன் அலுவலக பணியையும் சமுர்த்தி பிரிவில் தொடங்கினார்.கொம்மாதுறையை பிறப்பிடமாக கொண்ட இவர், கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.






