WhatsApp Image 2024 05 09 at 16.06.13 1

மட்டக்களப்பு வாகனேரி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட படுகாடு கண்டத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பில் சிலர் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக மாவட்ட செயலகம் விரைந்து செயற்பட்டமைக்கு அமைய அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

இரண்டு நாட்களாக  வனலாகா திணைக்களத்திற்கு சொந்தமான வனப்பகுதியில் இனந்தெரியாத சிலர் கனரக வாகனத்தின் உதவியுடன் துப்பரவு பணியில் ஈடுபடுவதாக மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து விரைந்து செயற்பாட்டினை மேற்கொண்ட மாவட்ட செயலக மற்றும் கிரான் பிரதேச செயலக குழுவினரும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஆலோசனைக்கு அமைய  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஶ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டலில் குறித்த இடத்தினை முற்றுகையிட்டதுடன், கனரக  வாகனத்தை கைப்பற்றியுள்ளதுடன், சட்ட நடவடிக்கைக்காக வாகனத்தை பொலிசாரிடம் கையளிக்கவுள்ளதுடன், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளனர்.