மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் 27.08.2019 அன்று மாவட்ட செயலக கூட்ட மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட காணிப்பிரிவின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதம கணக்காளர் திரு.கே.ஜெகதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, விவசாயபணிப்பாளர் திரு.வை.வீ.இக்பால், கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் திரு.கே.ஜகன்னாத், விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர் திரு.எஸ்.பேரின்பராசா கமநல காப்புறுதி பணிப்பாளர் திரு.கே.பாஸ்கரன். தேசிய உரச் செயலக உதவிப் பணிப்பாளர் திரு.எஸ்.சிராஜுதீன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வங்கித்துறை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலரும் பிரசன் னமாகியிருந்தனர்.

இக்கூட்டத்தில் கடந்த காலத்தில் இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய பயிர்ச்செய்கை, கால்நடை உற்பத்தி, உள்ளக மீன்பிடிதுறைகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்நோக்கிய சவால்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

 DSC 0074DSC 0065DSC 0099DSC 0090DSC 0072DSC 0125DSC 0120DSC 0128DSC 0132DSC 0084DSC 0095DSC 0098DSC 0114