WhatsApp Image 2024 05 21 at 10.23.30

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி்க் குழுத் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.05.2024 அன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லைப் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் சாரதிகளின் பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன், மாநகர சபை அதிகாரிகள், மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கத்தலைவர் ஜெயப்பிரகாஸ் என பலர் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2024 05 21 at 10.23.30 1 WhatsApp Image 2024 05 21 at 10.23.32 WhatsApp Image 2024 05 21 at 10.23.31