கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின், மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் விசேட திட்டத்திற்கமைய மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு நகரிலில் நிர்மாணிக்கப்பட்ட தனியார் பேரூந்து நிலையத்தின் புதிய கட்டிடதொகுதி எதிர்வரும் 12ம் திகதி காலை 10 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த தனியார் பேரூந்து நிலையத்தின் புதிய கட்டிட தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் பற்றி திட்டமிடும் விசேட கூட்டம் 02.09.2019 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு.தியாகராஜா சரவணபவான், மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு உத்தியோகத்தர் திரு.மகேந்திர ஜெயசிங்க, காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் திரு.கே.லிங்கராசா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு பணிப்பாளர் திரு.எந்திரி, திரு.ஏ.எம்.நாசர் உட்பட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.





