மட்டகளப்பு மாவட்டத்தின் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.சியாத் ஒழுங்கு செய்திருந்தார். இந் நிகழ்விற்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய ஒருங்கிணைப்பாளர் திரு. ர.சிவநாதன் மற்றும் பதினான்கு பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டு மடி கணணிகளைப் பெற்றுக்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அவசர அனர்த்த நிலைமைகளின் போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கல் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான பிரதேசமட்ட திட்டங்கள் தயாரித்தல், தகவல்களை பரிமாறல், தரவுகளை பேணல் போன்ற நடவடிக்கைக்கு ஏதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகளை பெற்று கொடுக்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மா.உதயகுமார் அவர்கள் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தார். அதனடிப்படையில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் கீழ் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மடி கணணிகளை இன்று அரசாங்க அதிபரினால் வழங்கிவைக்கப்பட்டது.





