WhatsApp Image 2024 07 04 at 15.23.40 1

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி காயத்திரி ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.07.2024 அன்று  இடம்பெற்றது.

 

இதன் போது மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விடயங்கள்  தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் ஐய வினாக்களுக்கு சரியான பதில்கள் வழங்கப்படுமிடத்து இறுதி கணக்காய்வு அறிக்கையில் இடம்பெறாது என்றார். இவ்விடயம் தொடர்பில் விரிவாக கணக்காய்வு அத்தியட்சகரினால் விளக்கங்கள் தெளிவு படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி  சுதர்ஷினி ஶ்ரீகாந், சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் வஜிர சந்தனகுருப்பு, மாவட்ட பிரதம கணக்காளர் எம்.எஸ்.பஸிர், பிரதேச செயலாளர்கள், கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம். மாஹிர், கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் எம். ஆர் வி. ஆர் மீபுர, உதவி பிரதேச செயலர்கள்,கணக்காளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 07 04 at 15.22.33 WhatsApp Image 2024 07 04 at 15.23.42 2 WhatsApp Image 2024 07 04 at 15.23.40 WhatsApp Image 2024 07 04 at 15.23.41

WhatsApp Image 2024 07 04 at 15.23.41 1 WhatsApp Image 2024 07 04 at 15.23.42 WhatsApp Image 2024 07 04 at 15.23.42 1