
மட்டக்களப்பில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அரையாண்டுக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.07.2024 அன்று இடம்பெற்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வெளிக்கள பிரிவுக்குரிய பிரதிப்பணிப்பாளர் தர்ஷன , தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வட கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் ரசிர் முஹமட் ரசாட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் உத்தியோகத்தர்களின் திறன் மேம்பாட்டை அபிவிருத்தி செய்வதற்காக இடம்பெற்ற இந்நிகழ்வில் எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தை போதைப்பொருள் பாவனையற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் என்பதுடன் சிறார்களை பாதுகாத்து விழிப்புணர்வு வழங்கவேண்டியது எமது கடமையும் பொறுப்புமாகும் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






