WhatsApp Image 2024 07 19 at 12.22.43 1

தாய்லாந்து நாட்டில் இடம்பெறவுள்ள ஆசிய ஆடவர்  மல்யுத்த செம்பியன் சிப் போட்டியில் மட்டக்களப்பு  சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் கிருஷ்ணகுமார் ஹரிபிரசாத் பங்குபற்றவுள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மாணவனுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அத்துடன்  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவானந்தா தேசிய பாடசாலையில்  உயர்தரத்தில்  இறுதி ஆண்டில் கல்வி பயிலும்  மாணவன் கிருஷ்ணகுமார் ஹரிபிரசாத் மாணவனுக்கு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஶ்ரீகாந்த் ,உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார் மற்றும் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் ஆகியோர் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இலங்கை மல்யுத்த சம்மேளனம் நடாத்திய மல்யுத்த தெரிவுப் போட்டியில் 57kg இடைப்பிரிவில்   வெற்றி பெற்று, தாய்லாந்து நாட்டில் இடம் பெறவுள்ள 20  வயதுக்குட்பட்ட  ஆடவர்  ஆசிய செம்பியன் சிப் மல்யுத்த போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவன் ஹரிபிரசாத்  செல்லவுள்ளமை  குறிப்பிடத்தக்கது. மாணவனுக்கு மல்யுத்த நுட்பங்களை ஆசிரியர் திருச்செல்வம்  அவர்கள் வழங்கி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 07 19 at 12.22.43 1 WhatsApp Image 2024 07 19 at 12.22.43 WhatsApp Image 2024 07 19 at 12.22.44 1 WhatsApp Image 2024 07 19 at 12.22.45